• June 2, 2023

ட்ரெண்டாகும் #ஹிந்தி_தெரியாது_போடா

 ட்ரெண்டாகும் #ஹிந்தி_தெரியாது_போடா

ட்ரெண்டாகும் #ஹிந்தி_தெரியாது_போடா – யுவன் ஷங்கர் ராஜா மற்றும் மெட்ரோ படத்தில் நடித்த ஸ்ரீரிஷ் சரவணன், ட்விட்டரில் பதிவிட்ட ஒரு புகைப்படத்தால், இந்தியா முழுக்க இந்த வார்த்தை ட்ரெண்ட் ஆகியுள்ளது.

இந்த புகைப்படத்தை MP கனிமொழி Retweet செய்துள்ளார். அது தமிழர்களின் மத்தியில் பிரபலமாகி, சமூகவலைத்தளத்தில் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த T-shirt டிசைன் இனி வரும்காலத்தில் இளைஞர்களால் விரும்பி அணியப்படும் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த T-shirt உடன் நடிகர் சாந்தனு மற்றும் அவரின் மனைவியும் புகைப்படம் எடுத்துள்ளனர்.

#ஹிந்தி_தெரியாது_போடா

டிரெண்ட் ஆகி வரும் இந்த HashTag-ன் கீழே, பெரியார், அண்ணா, கருணாநிதி அவர்களின் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில் நமது அண்டை மாநிலங்களில் இருக்கும் அதிகாரப்பூர்வ லோகோக்களின் இந்தி எழுத்து இருந்தும், தமிழகத்தின் லோகோவில் அதிகாரப்பூர்வ லோகோவில் ‘இந்தி எழுத்து இல்லை’ என்பதை, திமிருடன் தமிழர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

hindi theriyathu poda
hindi theriyathu poda

Deepan

http://www.deeptalks.in

Script writer, Video Editor & Tamil Content Creator