பண மழையில் நனைந்த பிரபல பாடகி !!!

வாழ்வில் ஒரு முறையாவது பணமழை பொழியாதா என கனவு கண்டிருப்போம். ஆனால் குஜராத்தில் உள்ள ஒரு பாடகிக்கு அந்த சம்பவம் உண்மையில் அரங்கேறியுள்ளது.
குஜராத்தில் பிரபல பாடகியான ஊர்வசி ரதாதியா தனக்கு கிடைத்த பணமழை பாராட்டை வீடியோவாக தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். குஜராத்தில் இவரது கச்சேரியை காண பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

அதில் ஒரு ரசிகர் தனது உற்சாகத்தை வெளிப்படுத்த ஒரு பக்கெட் நிறைய ரூபாய் நோட்டுகளை நிரப்பி ஊர்வசி மீது மலைபோல கொட்டியுள்ளார். இச்சம்பவம் பார்ப்போரையும் கேள்விப்படுவோரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட குஜராத்தி பாடகி ஊர்வசி, “தனது ரசிகர்களின் அன்பு எதற்குமே ஈடாகாது எனவும் hashtag-ல் #MoneyRain எனவும் குறிப்பிட்டுள்ளார்”. இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவிற்கு அவரது ரசிகர்கள் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
அவரது ரசிகர்களை தாண்டி நடுநிலையான நெட்டிசன்கள் அனைவரும் இந்த வீடியோவிற்கு ஆச்சரியமூட்டும் emoji-க்களை கருத்துக்களாக பதிவிட்டு வருகின்றனர்.
- பொன்னியின் செல்வன் முழு கதை | Ponniyin Selvan Full Story
- Ponniyin Selvan Story Part 05 – பொன்னியின் செல்வன் பாகம் 5
- Ponniyin Selvan Story Part 04 – பொன்னியின் செல்வன் பாகம் 4
- Ponniyin Selvan Story Part 03 – பொன்னியின் செல்வன் பாகம் 3
- Ponniyin Selvan Story Part 02 – பொன்னியின் செல்வன் பாகம் 2
பாடகி ஊர்வசி ரதாதியா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவை கீழே காணுங்கள்.
இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.