9 அடிக்கு முடி வளர்த்து சாதனை புரிந்த பெண் !!!

உலகெங்கிலும் உள்ள பெண்கள் ஆங்காங்கே பல உலக சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த அகங்க்ஷா எனும் பெண்மணி நீளமான தலை முடி வளர்த்து சாதனை புரிந்துள்ளார்.
நீளமான முடியை கொண்ட Rapunzel எனும் கார்ட்டூன் கதாபாத்திரத்துடன் அகங்க்ஷாவின் தலைமுடி ஒப்பிடப்படுகிறது. இவரின் தலை முடியானது 9 அடி 10.5 அங்குலங்கள் வளர்ந்துள்ளது. புகைப்படங்களில் இவரது தலைமுடி பார்ப்பதற்கு ஒரு நீளமான கருப்புத் துணியை போல காட்சியளிக்கிறது.

இவரது பெயர் 2020 – 2022 வருடத்திற்கான லிம்கா உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்திலும் இவரது சாதனை இடம்பெற்றுள்ளது.
3 மீட்டருக்கு மேல் தனக்கு தலை முடி வளர்வது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் இதை எனது பாக்கியமாகவும் உணர்வதாகவும் அகங்க்ஷா குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலேயே நீளமான தலைமுடி வைத்திருக்கும் அகங்க்ஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவுகளும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
- பொன்னியின் செல்வன் முழு கதை | Ponniyin Selvan Full Story
- Ponniyin Selvan Story Part 05 – பொன்னியின் செல்வன் பாகம் 5
- Ponniyin Selvan Story Part 04 – பொன்னியின் செல்வன் பாகம் 4
- Ponniyin Selvan Story Part 03 – பொன்னியின் செல்வன் பாகம் 3
- Ponniyin Selvan Story Part 02 – பொன்னியின் செல்வன் பாகம் 2
இந்த நீளமான தலைமுடியை வைத்திருக்கும் சாதனையை 2019 ஆம் ஆண்டிலிருந்து அகங்க்ஷா தன் வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தலை முடியை பராமரிப்பதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வீர்கள் என கேட்டதற்கு, “ஒரு நாளைக்கு இருபது நிமிடத்திற்கு மேல் நான் தலைமுடியைப் பராமரிக்க எடுத்துக்கொள்ள மாட்டேன்.”, என அதிர்ச்சி அளிக்கும் பதிலை அவர் கூறியுள்ளார்.
சாதனை பெண்மணியான அகங்க்ஷா யாதவ் அவர்களுக்கு தீப் டாக்ஸ் தமிழ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அகங்க்ஷாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவை கீழே காணுங்கள்.
இது போன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.