• April 7, 2024

ஏர் ஆம்புலன்ஸ் சேவையை அறிவித்தது தமிழக அரசு !!!

 ஏர் ஆம்புலன்ஸ் சேவையை அறிவித்தது தமிழக அரசு !!!

தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் மருத்துவமனையை வந்தடையாததற்கு போக்குவரத்து நெரிசல் ஒரு முக்கிய காரணம். இதனை கருத்தில் கொண்டு ஏர் ஆம்புலன்ஸ் சேவை தமிழகத்தில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.


24/7 Air Ambulance Services in Ahmedabad- Affordable Company

இந்த திட்டத்தின் முதற் கட்டமாக 2005ஆம் ஆண்டு அரசுமுறை பயணத்திற்காக தயாரிக்கப்பட்ட பெல் 412 ep ரக ஹெலிகாப்டர் ஒன்று ஏர் ஆம்புலன்ஸாக மாற்றப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆண்டு நவம்பர் மாதம் முதல் இயக்கப்படாமல் இருக்கும் இந்த ஹெலிகாப்டரை அவசர காலங்களில் மக்களுக்கு உதவும் வகையில் தயார் படுத்த குழு ஒன்று அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2017ஆம் ஆண்டு தனியார் மருத்துவமனைகளில் ஏர் ஆம்புலன்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழக அரசின் சார்பில் ஏர் ஆம்புலன்ஸ் இயக்கப்படும் என்று அறிவிப்பு வந்ததிலிருந்து பல்வேறு தரப்பினரும் அரசின் இந்த அறிவிப்பை பாராட்டி வருகின்றனர்.

Government plans air ambulance service to meet emergency needs - The Hindu

இந்த பெல் 412 ep ரக ஹெலிகாப்டர் முதலமைச்சரின் அரசு பயணங்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட ஒரு ஹெலிகாப்டரை மக்கள் சேவைக்காக தயார் படுத்த முடிவெடுத்ததற்காக முதலமைச்சரை சட்டமன்ற உறுப்பினர்கள் பாராட்டினர்.

போக்குவரத்து நெரிசலால் பறிபோகும் பல உயிர்களை இந்த ஏர் ஆம்புலன்ஸ் திட்டம் மூலம் காப்பாற்ற முடியும். இது போன்ற மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு தீப் டாக்ஸ் தமிழ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.