• May 28, 2023

நெஞ்சை உருகுலையவைக்கும் காட்சி – படகின் மீது விழுந்த மிகப்பெரிய பாறை

 நெஞ்சை உருகுலையவைக்கும் காட்சி – படகின் மீது விழுந்த மிகப்பெரிய பாறை

கேபிடோலியோ பகுதியில் (Capitolio region) உள்ள சுற்றுலாப் பகுதியான ஃபர்னாஸ் ஏரி (Furnas Lake) ஒரு சுற்றுலா இடமாகும். வெளியூர் மக்களும், வெளிநாட்டு மக்களும் அங்கு ஏரிக்கு நடுவே இருக்கு மிகப்பெரிய பாறைகளை ரசித்தவாறே படகில் பயணம் செய்வார்கள்.

பாறை சுவர்கள், குகைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளைக் காண சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிந்துகொண்டே இருப்பார்கள்.

அவ்வாறு பல படகுகள் (08-01-2022) சனிக்கிழமை அன்று பயணம் செய்துகொண்டிற்கும் போது, ஒரு பெரிய பாறைத் துண்டு, பிளந்துகொண்டு அங்கு இருந்த மூன்று படகுகளின் மேல் விழுந்தது.

“இதுவரை, ஐந்து உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள் உள்ளன” மற்றும் “தற்போதைய மதிப்பீட்டின்படி, 20 பேர் காணாமல் போயுள்ளனர்,” மேலும் 32 பேர் காயமடைந்தனர், மினாஸ் ஜெரைஸ் தீயணைப்பு வீரர்களின் தளபதி கர்னல் எட்கார்ட் எஸ்டெவோ டா சில்வா ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறியிருக்கிறார்.

மற்ற படகில் பயணித்த ஒரு பயணி, அந்த பாறை விழும் விடீயோவை அவரது போனில் பதிவு செய்திருக்கிறார். அந்த வீடியோ இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடீயோவை கீழே காணுங்கள்.

சமூக ஊடகங்களில் மற்றொரு வீடியோவும் உலாவருகிறது. அதில் இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பு, அதில் பலர் “பல கற்கள் விழுகின்றன” என்று எச்சரித்தது மற்றும் மற்ற படகுகளில் இருந்தவர்களை சுவரில் இருந்து விலகிச் செல்லுமாறு கத்தியது பதிவாகியுள்ளது.

“சாட்சிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் உறவினர்களின் தகவல்களின்” அடிப்படையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டது என்று எஸ்டீவோ கூறினார்.

இதுபோல பல தகவல்களை தெரிந்துகொள்ள www.deeptalks.in உடன் இணைந்திருங்கள்.

Deepan

http://www.deeptalks.in

Script writer, Video Editor & Tamil Content Creator