• May 28, 2023

மீண்டு வரும் நானும் ரவுடி தான் லோகேஷ்

 மீண்டு வரும் நானும் ரவுடி தான் லோகேஷ்

விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்டோர் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கி வெளியான திரைப்படம் நானும் ரவுடிதான். திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தவர் லோகேஷ்.  கடந்த மார்ச் மாதம், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் லோகேஷ். இதை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பல நடிகர்கள் அவரை நேரில் சந்தித்து, மருத்துவ உதவிகளை வழங்கினார்கள்.

இந்நிலையில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை நடிகை சனம் செட்டி பகிர்ந்துள்ளார். நடிகர் லோகேஷ் அவர்களுக்கு தலையில் ஒரு வெற்றிகரமான அறுவை சிகிச்சையை செய்து உள்ளார்கள். அந்த சிகிச்சை இன்னும் 10 நாட்களில் முழுவதுமாக முடிவடைந்துவிடும்.‌பின் இறுதி தையல்கள் அகற்றப்பட்ட அவர் முழுமையாக குணமடைவார் என்று அவரது தாயார் உறுதிப்படுத்தியுள்ளார்.

Deepan

http://www.deeptalks.in

Script writer, Video Editor & Tamil Content Creator